Monday, January 10, 2011

காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன்

வாழ்க்கைப் பாதையில் வழிதெரியாது திகைத்து நிற்கையில் தேவனே நீராவது எனக்கு வழிகாட்டக் கூடாத என்ற ஏக்க எதிர்பார்ப்பில் இருக்கையில் பாட மிகவும் ஏற்றதொரு பாடல் இது. இப்பாடலின் வரிகள் மிகவும் அர்த்தம் பொதிந்தவை. பொருள் உணர்ந்து மனதிலிருந்து மருகி பாடும்போது நம் உள்ளம் தேவனைப் பருகும்.
இப்பாடலின் முதல் கவியில் “தூர காட்சி ஆசியேன், ஓர் அடி மட்டும் என் முன் காட்டுமேன்” என்கிற வரிகள் மிகவும் என்னைத் தொட்டவை ஆகும். நம் வாழ்வில் நாம் அடுத்து எடுத்துச் செல்ல வேண்டிய அந்த ஒரு அடியை தேவன் நமக்கு காட்டினாலேயே நமக்கு வழி கிடைத்து விடுமே. இப்பாடல வரிகளை வாசித்தும் கொடுக்கப்பட்ட இணைப்பில் பாடலைக் கேட்டும் மகிழுங்கள். இப்பாடலை எழுதியவர் ஜான் நியுமேன் என்ப்வர் ஆவார். இப்பாடலின் வரலாறு அறிய: இங்கே வாங்க

1.காரிருளில் என் நேச தீபமே ,
நடத்துமேன் ;
வேறொளியில்லை; வீடும் தூரமே ,
நடத்துமேன் ;
நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன் :
ஓர் அடி மட்டும் என் முன் காட்டுமேன் .

2. என் இஷ்டப்படி நடந்தேன் ஐயோ !
முன்னாளிலே ;
ஒத்தாசை தேடவில்லை இப்போதோ
நடத்துமே;
உல்லாசம் நாடினேன் திகிலிலும்
வீம்பு கொண்டேன் அன்பாக மன்னியும்

3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர் ;
இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர்
நடத்திடும் ;
உதய நேரம் வரக் கழிப்பேன்
மறைந்து போன நேசரைக் காண்பேன்

Lead, kindly Light, amid th'encircling gloom, lead Thou me on!
The night is dark, and I am far from home; lead Thou me on!
Keep Thou my feet; I do not ask to see
 The distant scene; one step enough for me.

I was not ever thus, nor prayed that Thou shouldst lead me on;
I loved to choose and see my path; but now lead Thou me on!
I loved the garish day, and, spite of fears,
 Pride ruled my will. Remember not past years!

So long Thy power hath blest me, sure it still will lead me on.
O'er moor and fen, o'er crag and torrent, till the night is gone,
And with the morn those angel faces smile, which I
Have loved long since, and lost awhile!

Meantime, along the narrow rugged path, Thyself hast trod,
Lead, Saviour, lead me home in childlike faith, home to my God.
To rest forever after earthly strife
In the calm light of everlasting life.


பாடலைக் கேட்க: காரிருளில் என் நேச தீபமே