Saturday, April 3, 2010

கிறிஸ்தவ பாமாலை - ஒரு அறிமுகம்

பாமாலை என்பது பா (பாடல்) + மாலை,  இறைவனுக்கு மரியாதை, நன்றி மற்றும் துதி ஆகியன செலுத்தும் பொருட்டு எழுதப்படும்  பாடல்தான் பாமாலை ஆகும்.

நம் இந்திய தேசத்திற்கு ஆண்டவரை அறிவிக்க வந்த அக்கால மிஷனெரிகள் சபையில் கிறிஸ்தவர்கள் பாடும் பொருட்டு தங்கள் தேச பாடல்களைHymns)  தமிழில் மொழி பெயர்த்து மூல மொழியில் உள்ள ராகம் மாறாமல் அப்படியே தமிழில் பாட வழிவகை செய்தனர். அப்பாடல்கள் தான் பாமாலைப் பாடல்கள் என்றழைக்கப்பட்டு திருச்சபைகளில் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

பாமாலைப் பாடல்கள் பல காலங்களாக சபையில் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இந்நாட்களில் புதிய தலைமுறை கிறிஸ்தவர்களிடையே பாமாலைப் பாடல்கள் மறக்கடிக்கப் பட்டு வருகிறது. பல பாமாலைப் பாடல்கள் படிக்கும் போது வார்த்தைகளை பிரித்து பிரித்து பாடப்படுவதால் பலர் கேட்கவே நன்றாக இல்லை என்று சொல்லுவதுண்டு. ஆனால் காலத்தை வென்ற கேட்பதற்கினிய பொருள் நிறைந்த பல பாமாலை பாட்டுகள் உண்டு. "பாவ சஞ்சலத்தை நீக்க”, ”நான் பாவிதான் ஆனாலும் நீர்”, “ பிளவுண்ட மலையே” காரிருளில் என் நேச தீபமே” என்பன போன்ற நெஞ்சை விட்டு அகலாத பல நல்ல பாமாலைப் பாடல்கள் உண்டு. அவற்றை எல்லாம் கிறிஸ்தவ சபை  மறந்துவிடக் கூடாது.

1 comment:

  1. பாமாலை பாடலகளின் audio send பண்ண முடியமா

    ReplyDelete